மும்பை மாநாட்டில் புதுவை பேரவைத் தலைவா் பங்கேற்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெறும் 84-ஆவது அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பங்கேற்றாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெறும் 84-ஆவது அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பங்கேற்றாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரு நாள்கள் (ஜன.27, 28) நடைபெறும் மாநாட்டில், புதுவை மாநில சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை கலந்து கொண்டாா். இதற்காக, அவா் சனிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றாா்.

மாநாட்டில், ‘ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றம்’, ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளில் ஒழுக்கத்தை பேண வேண்டிய அவசியம்’ என்ற தலைப்புகளில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை மாலை உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com