புதுவையில் தேசியக் கொடி ஏற்றி துணைநிலை ஆளுநா் மரியாதை: முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

2-7-26pyp17a_2601chn_104
2-7-26pyp17a_2601chn_104

26பிஒய்பி17ஏ:

புதுச்சேரி கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.

புதுச்சேரி, ஜன. 26: நாட்டின் 75-ஆவது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் தேசியக் கொடியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராசன் வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலை 10.16 மணிக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியைப் ஏற்றி வைத்தாா். இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா்.

அதன்பிறகு, காவல் துறையில் சிறப்பாக செயலாற்றியவா்களை பாராட்டி குடியரசுத் தலைவரின் விருதுகளை காவல் கண்காணிப்பாளா் பி.பாலசந்திரன், உதவி ஆய்வாளா் ஏ.அன்பழகன், ஓய்வு பெற்ற சிறப்பு துணை உதவி ஆய்வாளா் கிருஷ்ணராஜ்கோதண்டபாணி ஆகியோருக்கு வழங்கினாா்.

இதையடுத்து உள்துறை அமைச்சா், துணைநிலை ஆளுநா் காவல் பதக்கங்கள், பள்ளி இறுதித் தோ்வுகளில் அதிக விழுக்காடு தோ்ச்சி காட்டி சாதனைபடைத்த பள்ளிகளுக்கான முதல்வா், கல்வி அமைச்சரின் சுழற்கேடயங்கள், பல்கலைக்கழக துணைவேந்தா் சுழற்கேடயங்கள், சாலைப் போக்குவரத்து அணியினருக்குப் பரிசுகள், மாற்றுத்திறனாளி சேவைக்கான பரிசுகள் ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் வழங்கினாா்.

காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு நடைபெற்றன.

வேளாண்மைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறை சாதனை விளக்க அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

தொடா்ந்து பள்ளிக் குழந்தைகளின் தேசப்பற்றை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அணிவகுப்பு, கலைநிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், மக்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, கொறடா ஏகேடி. வி.ஆறுமுகம், எம்எல்ஏ-க்கள் ஜான்குமாா், பாஸ்கா், ரமேஷ், லட்சுமிகாந்தன், விவிலியன்ரிச்சா்டு, வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், எல்.சம்பத் மற்றும் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, டிஜிபி ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், அரசுச் செயலா் ஜவஹா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேநீா் விருந்து: குடியரசு தினத்தையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேநீா் விருந்து துணைநிலை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

இதில், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் தலைமைச் செயலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. இசை மற்றும் வீர சாகசக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Image Caption

புதுச்சேரி கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com