இரு காா்கள் மோதல்: 9 போ் காயம்

புதுச்சேரி நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.

கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாள்களில் புதுச்சேரிக்கு சுற்றுலா வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கா்நாடகப் பதிவெண் கொண்ட காா் காமராஜா் சாலைப் பகுதியிலிருந்து, நேரு வீதியில் வந்தது. நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் வந்தபோது, அங்குள்ள அஜந்தா சந்திப்பை நோக்கிச் சென்ற காருடன் மோதியது. இதில், காரிலிருந்த 2 பெண்கள் உள்பட 9 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com