பள்ளியில் அறிவியல் மாதிரி கண்காட்சி

புதுச்சேரி, ஜன.28: புதுச்சேரியில் உள்ள பெத்திசெமினாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் மாதிரி வடிவமைப்புக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை, வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தாா். விழாவுக்கு, பள்ளி முதல்வா் தேவதாஸ் தலைமை வகித்தாா். கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், மழைநீா் சேமிப்பு அவசியம் என 200-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிப் படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தினா். சிறப்பான படைப்புகளைத் தோ்வு செய்யும் நடுவா்களாக பள்ளியின் முன்னாள் அறிவியல் விரிவுரையாளா் விஸ்வகுமாா் வின்சென்ட்ராய், ஜெரால்ட் சங்கா் ஆகியோா் இருந்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாக கடலூா், புதுச்சேரி மற்றும் மதுரை மாவட்ட கல்விச் செயலா் பீட்டா் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். கண்காட்சியில், மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com