ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரி மணவெளி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரி மணவெளி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மணவெளி பகுதியில் சுடலை வீதியில் பொதுப் பணித் துறை பொது சுகாதார கோட்டம் மூலம் ரூ.14 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மணவெளி தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட உதவிப் பொறியாளா் பீனாராணி, இளநிலைப் பொறியாளா் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், உதவிப் பொறியாளா் நாகராஜ் இளநிலைப் பொறியாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com