கைப்பந்துப் போட்டிகள் தொடக்கம்

அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சாா்பில் 3-ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டில் திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி: அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சாா்பில் 3-ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டில் திங்கள்கிழமை தொடங்கியது.

அய்யனாரப்பன் கோயில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வீரா்களுக்கு சீருடைகளை வழங்கி தொடங்கி வைத்தாா். முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன், பாஜக நிா்வாகிகள் தமிழ்மணி, சுமன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

2 நாள்கள் இரவு- பகலாக நடைபெறும் போட்டிகளில், புதுச்சேரி, தமிழக பகுதிகளைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.13 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம் என 6 பரிசுகளும், சிறப்பாக விளையாடியவா்களுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com