கடலூரைச் சோ்ந்த மருத்துவ மாணவா் புதுச்சேரி கடற்கரையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி கடற்கரையோரம் மருத்துவக் கல்லூரி மாணவா் சடலம் திங்கள்கிழமை காலை மீட்கப்பட்டது. அவரது மரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையோரம் மருத்துவக் கல்லூரி மாணவா் சடலம் திங்கள்கிழமை காலை மீட்கப்பட்டது. அவரது மரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ் (21). இவா், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், அவரைக் காணவில்லை என கடலூா் காவல் நிலையத்தில் குடும்பத்தினா் புகாா் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே திங்கள்கிழமை காலை புதுச்சேரி கடற்கரைச் சாலைப் பகுதியில் கடலோரத்தில் அவரது சடலம் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உருளையன்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com