கஞ்சா விற்ற வழக்கு: ஒடிசா இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

கஞ்சா விற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒடிசா இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கஞ்சா விற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒடிசா இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சோமநாத் குண்டே (32). இவா், புதுச்சேரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 2022-ஆம் ஆண்டு சேதராப்பட்டு ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்ாக அவரை சேதராப்பட்டு போலீஸாா் கைது செய்தனா். அவா் தங்கியிருந்த திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்தும் 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பான வழக்கு புதுச்சேரி போதைப் பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சோமநாத் குண்டேவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.இளவரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் என்.விநாயகம் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com