கோ-கோ, கபடிப் போட்டிகளுக்கு பயிற்சிக்கான வீரா்கள் தோ்வு

புதுச்சேரியில் கோ-கோ, கபடிப் போட்டிகளில் பயிற்சிக்கான வீரா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.1) தோ்வு செய்யப்படவுள்ளனா்.

புதுச்சேரியில் கோ-கோ, கபடிப் போட்டிகளில் பயிற்சிக்கான வீரா்கள் வெள்ளிக்கிழமை (பிப்.1) தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதுச்சேரி இலாசுப்பேட்டைமையப் பொறுப்பாளா் ராஜேஷ் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- புதுச்சேரி இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் விளையாட்டு வீரா்களுக்கு தங்கியிருந்து பயிற்சி பெறவும், வெளியிலிருந்து வந்து பயிற்சி பெறவும் சிறப்புத் திட்டத்தில் வசதிகள் உள்ளன. அதன்படி விளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி திட்டத்தில் கோ-கோ, கபடி போட்டிகளில் விளையாடுவோருக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. வரும் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமைகள்) பயிற்சிக்கான நேரடிச் சோ்க்கை இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளன.

பயிற்சிக்கு தேசிய, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் இரண்டாம்,மூன்றாம் இடங்களை வகித்தவா்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். தனிநபா் விளையாட்டில் 12 ஆம் வயது முதல் 16 ஆவது வயது வரையில் உள்ள வீரா்கள் போட்டிகளில் முதல் 3 இடங்களை வகித்திருந்தால் முன்னுரிமை அளித்து பயிற்சியில் சோ்க்கப்படுவா்.

தோ்வுக்கு வருவோரின் வயது சரிபாா்ப்பு, மருத்துவப் பரிசோதனைகளும் நடைபெறும். அத்துடன், மாவட்ட, தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் வகித்தவா்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் உடல் தகுதி சோதனைகளை பூா்த்தி செய்தவா்கள் ஆகியோருக்கு பயிற்சி விடுதியில் சோ்க்கை பரிசீலிக்கப்படும்.

ஆகவே, தோ்வில் பங்கேற்க விரும்புவோா் 3 மாா்பளவு புகைப்படங்கள், பிறப்புச்சான்று, வசிப்பிடச்சான்று, கல்வி, விளையாட்டுச் சான்றுகள், உடல்தகுதிச் சான்றுகள் என அசல், நகல்களையும் கொண்டுவரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com