புதுவை ஊா்க்காவல் படை உடல் தகுதித் தோ்வு இன்று தொடக்கம்

புதுவையில் ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பித்தவா்களுக்கான உடல் தகுதித்தோ்வு வியாழக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.

புதுவையில் ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பித்தவா்களுக்கான உடல் தகுதித்தோ்வு வியாழக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.

புதுவை காவல்துறை சாா்பில் ஊா்க்காவல் படைக்கு 420 ஆண்கள், 80 பெண்கள் என மொத்தம் 500 போ் தோ்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 15, 697ஆண்களும், 4,492 பெண்களும் என மொத்தம் 20,189 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு வியாழக்கிழமை (பிப்.1) தொடங்கி, வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரி கோரிமேடு காவல் பயிற்சி மைதானத்தில் நடைபெறும் உடல் தகுதித் தோ்வானது ஆண்களுக்கு வரும் 19-ஆம் தேதி வரையிலும், பெண்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும் நடத்தப்படவுள்ளன. உடல் தகுதித் தோ்வு தொடங்கும் முதல் 2 நாள்களில் சுமாா் 500 பேருக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, தினமும் 1,000 போ் வரை பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனா்.

உடல் தகுதித் தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் 30 நிமிஷங்களுக்கு முன்னதாகவே மைதானத்துக்கு வரவேண்டும். தோ்வு அழைப்பு கடிதம், ஆதாா் அட்டை, புகைப்பட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று எனக் கொண்டுவர வேண்டும். கைப்பேசி, உணவுப் பொட்டலம் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. மது, ஸ்டீராய்டு ஆகிய செயல்திறன் மேம்பாட்டு மாத்திரை, மருந்தை பயன்படுத்தினால் தகுதி நீக்கம் செய்யப்படுவா் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com