புதுவை சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுக் கூட்டம்

புதுவை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுக் கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொங்கி வைத்தாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்ளிட்டோா்

புதுச்சேரியில் சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலையில் பேரவை செயலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை, முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். கூட்டத்துக்கு, அதன் தலைவா் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், செந்தில்குமாா், பாஸ்கா், லட்சுமி காந்தன் மற்றும் முதன்மைக் கணக்காய்வுத் தலைவா் ஆனந்த், தணிக்கைத் துறை குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், தணிக்கைத் துறை அறிக்கையின் மீதான அரசுத்துறை செயலா்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, உள்துறை, நிதித்துறை, தொழில்துறை, கல்வி, வணிக வரித்துறை, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் துறை, கலால் துறை உள்ளிட்ட அரசுத் துறை செயலா்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com