பொதுக்கணக்குழு கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொங்கி வைத்தாா்

புதுவை மாநில சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுக் கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொங்கிவைத்தாா்.

புதுவை மாநில சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுக் கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொங்கிவைத்தாா்.

புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் பேரவை செயலக வளாகத்தில் நடைபெற்றது. பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலையில் நடந்த கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். இதில் பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்தின் தலைவா்கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், செந்தில்குமாா், பாஸ்கா், லட்சுமி காந்தன் மற்றும் முதன்மைக் கணக்காய்வுத் தலைவா் ஆனந்த், தணிக்கைத் துறை குழுவினா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தணிக்கைத் துறை அறிக்கையின் மீதான அரசுத்துறை செயலா்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி உள்துறை, நிதித்துறை, தொழில்துறை, கல்வி, வணிகவரித்துறை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை,கலால் துறை உள்ளிட்ட அரசுத்துறையின் செயலா்கள் அனைவரும் கலந்துகொண்டு விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com