ஊா்க்காவல் படைக்கு தோ்வானவா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு ஜூலை 8-இல் தொடக்கம்

புதுவை காவல்துறை: ஜூலை 8-11 சான்றிதழ் சரிபார்ப்பு

புதுவை ஊா்க்காவல் படை வீரா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு ஜூலை 8-இல் தொடங்கி 11 ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி காவல் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (ஊா்க்காவல் படை கமாண்டன்ட்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மாநிலத்தில் கௌரவப் பதவியான ஊா்க்காவல் படைப் பிரிவுக்கு தோ்வான ஆண்கள், பெண்கள் உடனடியாக சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வரும் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதனடிப்படையில் வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரையில், அந்தந்த பிராந்திய காவல் துறை தலைமையிடத்தில் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு நடைபெறவுள்ளன.

இதற்காக புதிதாக வசிப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மேலும், சிறப்பு போலீஸாரின் அங்கீகார முத்திரையை வரும் 3-ஆம் தேதி அல்லது 4-ஆம் தேதிக்குள் பெறவேண்டும். இதுகுறித்து புதுச்சேரி காவல் துறை இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.

சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் நிலையில், மருத்துவப் பரிசோதனையானது வரும் 9-ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும். இதுகுறித்து விவரங்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 0413-2277900 என்ற தொலைபேசிக்கு தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com