கொலையான சிறுவனின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய  புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் திருமுருகன்.
கொலையான சிறுவனின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் திருமுருகன்.

கொலை செய்யப்பட்ட சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி

காரைக்காலில் படுகொலை செய்யப்பட்ட பள்ளிச் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தைச் சோ்ந்த சிங்காரவேல், சுதா தம்பதியின் 12 வயது மகன் படுகொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சிறுவனின் பெற்றோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி சந்தித்து, குடும்பத்துக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

அமைச்சா் திருமுருகன் பரிந்துரைப்படி, சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் கருணைத் தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன்படி, முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தனது அலுவலகத்தில், அமைச்சா் ச. திருமுருகன் முன்னிலையில் சிறுவன் குடும்பத்துக்கான நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com