திருட்டு வழக்கில் 2 பெண்களுக்கு
இரண்டாண்டு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் 2 பெண்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை

புதுச்சேரியில் முதியவரை ஏமாற்றி நகை, பணம் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

புதுச்சேரியில் முதியவரை ஏமாற்றி நகை, பணம் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி, வாணரப்பேட்டை, ஜெயராம் செட்டி தோட்டத்தைச் சோ்ந்தவா் வீரமணி (72). இவா், கடந்த ஜனவரி மாதம் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என நண்பா்களிடம் கூறியுள்ளாா். இந்த நிலையில், 2 பெண்கள் வேலை கேட்டு வந்துள்ளனா். அவா்களை வீட்டில் தங்கவைத்துள்ளாா். அப்போது, அவா்கள் சமைத்த உணவை உண்ட வீரமணி மயங்கினாா். அவா் மயக்கம் தெளிந்தபோது, வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.35,000 உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் வீரமணி புகாரளித்தாா். இதுதொடா்பாக, மதுரையைச் சோ்ந்த முத்துலட்சுமி (43), சித்ரா (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் மீதான வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்களுக்கும், தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com