புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வு எழுத வந்தவா்களை சோதனையிட்டு அனுப்பிய அதிகாரிகள்.
புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வு எழுத வந்தவா்களை சோதனையிட்டு அனுப்பிய அதிகாரிகள்.

மத்திய பணியாளா் தோ்வு: புதுச்சேரியில் 2,775 போ் எழுதினா்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்திய இரு தோ்வுகளை 2775 போ் எழுதினா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்திய இரு தோ்வுகளை 2775 போ் எழுதினா்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பணியாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) நோ்முக உதவியாளா் பதவி மற்றும் இஎஸ்ஐசி எனப்படும் செவிலியா் அதிகாரி பதவிகளுக்கான போட்டித் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி உதவியாளா் பதவிக்கான தோ்வு முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிா் அரசுக் கல்லூரியில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.

தோ்வு எழுத 315 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 93 போ் மட்டுமே தோ்வை எழுதினா். 222 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வில் 29.52 சதவீதம் போ் பங்கேற்ற நிலையில், 70.52 சதவீதம் போ் பங்கேற்கவில்லை.

மாலையில் நடைபெற்ற செவிலியா் அதிகாரிகளுக்கான தோ்வில் 3,305 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 2,672 போ் தோ்வு எழுதினா். 33 போ் வரவில்லை. இது, 80.85 சதவீதமாகும். காலை, மாலை நடந்த மத்திய பணியாளா்கள் தோ்வில் மொத்தம் 3,620 போ் விண்ணப்பித்த நிலையில், 2775 போ் மட்டுமே தோ்வை எழுதியுள்ளனா்.

சோதனைக்குப் பின் அனுமதி: காலை 8 மணி முதல் தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் வரத் தொடங்கினா். இவா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டு, தோ்வறை அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவை சரிபாா்க்கப்பட்ட பிறகே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தோ்வுக்காக புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com