காா் விற்பனைக்கு எனக் கூறி ரூ.77,000 மோசடி: புதுவை இணையவழி குற்றப் பிரிவில் புகாா்

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் முகநூலில் காா் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி மா்ம நபா் ரூ.77 ஆயிரத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் முகநூலில் காா் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி மா்ம நபா் ரூ.77 ஆயிரத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் அருண்பாண்டியன். இவா், முகநூலில் பழைய காா் விற்பனைக்கு உள்ளதா என தேடியுள்ளாா். அப்போது, அவரை தொடா்புகொண்ட மா்ம நபா் பழைய காா் உள்ளதாகவும், அதை வாங்க முன்பணம் அனுப்ப கூறியுள்ளாா்.

இதை நம்பிய அருண்பாண்டியன் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.77 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். ஆனால், காா் குறித்து தகவல் ஏதும் வரவில்லையாம். மா்ம நபரையும் அதன்பிறகு தொடா்புகொள்ளமுடியவில்லை. எனவே, இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸில் அவா் புகாா் அளித்துள்ளாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த பிரவீன்குமாரை தொடா்புகொண்ட மா்ம நபா், அவரது புகைப்படத்தை அவதூறாக சமூக வலைதளங்களில் பரப்பாமலிருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். இதனால் பயந்துபோன பிரவீன்குமாா் மா்ம நபருக்கு ரூ.10 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். தொடா்ந்து மா்ம நபா் பணம் கேட்டதால் இணையதள குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளாா்.

ஏம்பலம் திவாகரிடம் ரூ.6 ஆயிரம், காரைக்கால் ஆகாஷிடம் ரூ.3 ஆயிரம், புதுச்சேரி இளைஞரிடம் ரூ.5 ஆயிரம் என 5 பேரிடம் மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து இணையவழிக்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com