புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் வாரிசுதாரா்கள் நலச்சங்கத்தினா்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் வாரிசுதாரா்கள் நலச்சங்கத்தினா்.

வாரிசுதாரா்கள் நலச்சங்கம் கண்டன ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் வாரிசுதாரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சத்திரியன் தலைமை வகித்தாா். செயலாளா் பிரபு முன்னிலை வகித்தாா். இதில் வேளாங்கண்ணி தாசன், கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரிந்து உயிரிழந்தவா்களின் வாரிசுகள் மற்றும் மருத்துவ ஓய்வு பெற்ற ஊழியா்களின் வாரிசுகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் வழங்கும் பணிக்காக 177 போ் விண்ணப்பித்து காத்துள்ளனா். எனவே, இவா்களுக்கான பணியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினா். மேலும், கருணை அடிப்படையிலான பணிக்கான கோப்புகளை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் கூறி ஆா்ப்பாட்டத்தில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com