மக்கள் பணியை தொடருவோம்: புதுவை பாஜக தலைவா்

புதுவை மாநிலத்தின் வளா்ச்சிப் பணியில் பாஜக தொடா்ந்து ஈடுபடும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மீதும், முதல்வா் என்.ரங்கசாமி மீதும் நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு வாக்களித்த புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பணியிலும், மாநிலத்தின் வளா்ச்சிப் பணியிலும் பாஜக தொடா்ந்து பாடுபடும்.

தோ்தலில் பணியாற்றிய புதுவை முதல்வா் உள்ளிட்டோருக்கு நன்றி என்றாா் சு.செல்வகணபதி எம்.பி.

X
Dinamani
www.dinamani.com