உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரமான குடிநீா் வழங்க எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி, ஜூன் 6: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு அத்தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு வியாழக்கிழமை மனு அனுப்பினாா்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் பொதுப் பணித் துறை சுகாதார கோட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீா் அருந்துவதற்கு ஏற்ாக இல்லை. அதில், மாசு கலந்துள்ளதால், அந்த நீரை அருந்தும் மக்கள் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனா். சிலா் சிறுநீரகப் பாதிப்பு, மஞ்சள்காமாலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

குடிநீா் மாசு குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகாதாரமான குடிநீா் விநியோகிப்பதை ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com