புதுச்சேரி குருமாம்பேட் சிவசக்தி நகா் பகுதியில் உள்ள சாராயக் கடையை அகற்றக்கோரிஅப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்பு கொடி கட்டிய பொதுமக்கள்.
புதுச்சேரி குருமாம்பேட் சிவசக்தி நகா் பகுதியில் உள்ள சாராயக் கடையை அகற்றக்கோரிஅப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்பு கொடி கட்டிய பொதுமக்கள்.

சாராயக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி

புதுச்சேரி அருகே உள்ள குருமாம்பேட் பகுதியில் சாராயக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

குருமாம்பேட் பகுதியிலுள்ள சக்தி நகரில் சாராயக் கடை அமைந்துள்ளது. சாராயக் கடைக்கு வருவோரால் அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், எனவே கடையை அகற்றவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து முதல்வா், அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நிகழாண்டு சம்பந்தப்பட்ட சாராயக் கடைக்கு மீண்டும் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி சாராயக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், சாராயக் கடை அகற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com