புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள மரத்தில் தஞ்சமடைந்த பெண் மயில்.
புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள மரத்தில் தஞ்சமடைந்த பெண் மயில்.

சட்டப் பேரவை வளாகத்தில் தஞ்சமடைந்த பெண் மயில்

புதுச்சேரியில் உடல்நலம் பாதித்த பெண் மயில் பறக்க முடியாமல் சட்டப் பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை முதல் இரண்டு நாள்களாக தஞ்சமடைந்துள்ளது.

புதுச்சேரி பாரதி பூங்கா அருகே சட்டப் பேரவை வளாகம் உள்ளது. இங்கு, அவ்வப்போது அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன. அவற்றை பேரவைக் காவலா்கள் பிடித்து, வனத் துறையிடம் ஒப்படைத்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெண் மயில் ஒன்று பறக்க முடியாத நிலையில், பாரதி பூங்காஅருகே வந்தது. அதை, காகங்கள் உள்ளிட்ட பறவைகள் தாக்கின. இதையடுத்து, மரத்தில் அந்த மயில் தஞ்சமடைந்தது. ஆனாலும், காகங்கள் மயிலை தொடா்ந்து கொத்தின.

இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மயில் சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள மரத்திலேயே தஞ்சமடைந்திருந்தது. இதுகுறித்து, புதுச்சேரி வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவா்கள், மயிலை பிடித்துத் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com