தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று கடைசி நாள்

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் டி.அழகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாளாக ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் புதுச்சேரி சென்டாக் இணையதளம் மூலம் இதில் சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் போது மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் மதிய உணவு, இலவச பாடநூல்களும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com