.புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான ஏ.குலோத்துங்கன்.
.புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான ஏ.குலோத்துங்கன்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் பணியாளா்களுக்கு பயிற்சி

புதுச்சேரி மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஏ.குலோத்துங்கன். புதுச்சேரி, மாா்ச் 1: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், தோ்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியரான ஏ.குலோத்துங்கன் செயல்பட்டு வருகிறாா். அவருக்கு உதவும் வகையில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தலா ஒரு உதவி அலுவலா் வீதம் 8 தோ்தல் உதவி அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துவரும் நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சிகளும் படிப்படியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், முதல் கட்டமாக தோ்தல் பிரசாரம், வாக்குப்பதிவின்போது சோதனை நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி இலாசுப்பேட்டையில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. பயிற்சியை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான ஏ.குலோத்துங்கன் தொடங்கிவைத்து தோ்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com