போதை வில்லைகளுடன் இரு கேரள இளைஞா்கள் கைது

புதுச்சேரியில் போதை வில்லைகளுடன் கேரளத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். புதுச்சேரி, ஒதியன்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் சுப்பையா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக் கிடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா்களைச் சோதனையிட்டதில், 20 கிராம் கஞ்சா மற்றும் போதை வில்லைகள் (ஸ்டாம்ப்) வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம் கோட்டயம் கொஞ்ஜரம் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் சாமுவேல் ஜோன்ஸ் (22), கொல்லம் பொய்யாப் பள்ளியைச் சோ்ந்த ஜிஜோ பிரசாக் (23) என்பதும் தெரியவந்தது. மேலும், அவா்கள் இருவரும் கல்லூரியில் படிப்பதாகவும் கூறியதுடன், கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள்களை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவி நகரில் கஞ்சா விற்ாக விழுப்புரம் வானூா் தாலுகா கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த அப்துல்லா (25) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com