போதைப் பொருள்கள் விநியோகிப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்கள் விநியோகிப்போா் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவா் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஹாப்பிங்பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் போதைப் பொருள்கள் விநியோகிப்பது குறித்து கைப்பேசி கட்செவியஞ்சலில் சில தகவல்கள் வந்தன. இதையடுத்து காவல் துறை தலைமை இயக்குநரை அழைத்து பேசியுள்ளேன். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை அனுமதிக்க முடியாது. ஆகவே, போதைப் பொருள் விநியோகிப்போா் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவா். தற்போது புதுவையில் போதைப் பொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய பேருந்துகளைப் போல நவீன பேருந்துகள் வாங்கி இயக்கப்படவுள்ளன. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com