புதுச்சேரி பாஜக நிா்வாகிகள் 3 போ் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

புதுச்சேரியில் பாஜக தோ்தல் பிரசார சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்களில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப் படங்கள் அச்சடித்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தோ்தல் பிரசார சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்களில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப் படங்கள் அச்சடித்தது தொடா்பாக 3 பாஜக நிா்வாகிகளை தாற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி மாநில பாஜக பொதுச்செயலா் எஸ். மோகன்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி பாஜக நிா்வாகிகள் கே.விஜயபூபதி, ஜெ.ராக் பெட்ரிக், கே.பாபு ஆகியோா் கட்சிப் பொறுப்புகள், அடிப்படை உறுப்பினா் ஆகியவற்றிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களுடன் கட்சியினா் எந்தத் தொடா்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் எஸ்.மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com