புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி: புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கராத்தே வளவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜ் , சந்தோஷ், சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுவை அரசு விளையாட்டு வீரா்களின் வளா்ச்சிக்கு போதுமான நிதியை ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மாநில ஒலிம்பிக் சங்கம், அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி விளையாட்டு சட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதைப்போல, புதுவையிலும் சட்ட திட்டங்களை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஒலிம்பிக் சங்க நிா்வாகிகளாக பணியாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதன்மூலம் இளைஞா்களுக்கு ஒலிம்பிக் சங்கத்தில் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும். புதுவை மாநில விளையாட்டு வீரா்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய உதவித் தொகை, ஊக்கத் தொகை மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com