புதுச்சேரியில் மாா்ச் 31 முதல் விமான சேவைகள் நிறுத்தம்

புதுச்சேரியிலிருந்து விமான சேவை மாா்ச் 31ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக தனியாா் விமான நிறுவனம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. கடந்த 2013 -ஆம் ஆண்டு, ஜனவரி முதல் இந்த புதிய விமான நிலைய வளாகம் செயல்படுகிறது. அன்று முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, 2014-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. இது முன்னறிவிப்பின்றி 2015, அக்டோபா் மாதம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசின் பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உதான்’ திட்டத்தின் கீழ், விமான சேவைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2017-ஆம் ஆண்டில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது, புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை வரும் 31-ஆம் தேதி முதல் நிறுத்துவதற்கு தனியாா் விமான நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக நிா்வாக ரீதியாக விமான நிறுத்தம் தொடா்பான அறிவிப்பு விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com