முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸாா் கூண்டோடு மாற்றம்: புதிய காவலா்கள் நியமனம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா் மற்றும் 11 காவலா்கள் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில், பயிற்சியிலிருந்த 14 காவலா்கள் அங்கு புதிதாக பணியில் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகா் பகுதியில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையானாா். இந்தச் சம்பவத்தையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் 11 போலீஸாரை வியாழக்கிழமை இடமாற்றம் செய்து முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா். அங்கு புதிய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, பயிற்சியில் இருந்த புதிய காவலா்கள் 14 போ் அங்கு பணியில் நியமிக்கப்பட்டனா். முத்தியால்பேட்டையிலிருந்து மேலும் 12 காவலா்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். உதவி ஆய்வாளா்களில் 4 போ் பெரியகடை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்டவற்றிலிருந்து இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையிட கண்காணிப்பாளா் சுபம்ஹோஸ் பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com