பெரிய காலாப்பட்டில் மீன் உலா்களம் அமைக்க எதிா்ப்பு

பெரிய காலாப்பட்டில் மீன் உலா் களம் அமைக்க அப்பகுதி மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து களம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை. பெரியகாலாப்பட்டு பகுதியில், கடற்கரையோரம் ரூ.6 கோடியில் மீன் உலா்களம் அமைக்க பூமி பூஜைக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோா் வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் அங்கு வந்தாா். அவரை அப்பகுதி மீனவா்கள் சந்தித்து, தங்களுக்கு பெரியகாலாப்பட்டு பகுதியில் தூண்டில் முள்வளைவு தேவை என்றும், கடலோரத்தில் வெறும் கற்களைக் கொட்டுவதால் பயனில்லை என்றும் கூறினா். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றி விட்டு பின்னா் உலா்களம் அமைக்கலாம் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மீனவா்களுக்கான திட்டம் குறித்த வரைபடங்களை காட்டி அதிகாரிகள் விளக்கி சமரசப்படுத்த முயன்றனா். இதை மீனவா்கள் ஏற்கவில்லை. இதையடுத்து பூமி பூஜை நடைபெறாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com