புதுச்சேரி பாஜக தோ்தல் பணிக் குழு கூட்டம்

புதுச்சேரி பாஜக தோ்தல் பணிக்குழு அறிமுகக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மக்களவைத் தோ்தல் பணிகளை கவனிக்க பாஜக சாா்பில் தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமையில் 37 அணிப் பிரிவுகளுக்கான 150 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்தக் குழுவினருக்கான முதல் அறிமுகக் கூட்டம் புதுச்சேரி கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தாா். கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை மேற்கொள்வது குறித்தும், பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகளை பொதுமக்களிடையே கூறி வாக்குச் சேகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், தொகுதி வாரியாக பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்ட அளவில் தோ்தல் அலுவலகம் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் எஸ்.மோகன்குமாா், பி.அசோக்பாபு எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com