மக்கள் நீதிமன்றங்களில் 1,182 வழக்குகளுக்குத் தீா்வு

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,182 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நிலுவையிலுள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதனடிப்படையில் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், காரைக்காலில் 4 அமா்வுகளும், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு அமா்விலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் தீா்வு காணப்பட்ட வழக்குகளுக்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்டோருக்கு மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன், சட்டப்பணிகள் ஆணையச் செயலா் நீதிபதி அம்பிகா ஆகியோா் வழங்கினா். புதுவை மாநிலத்தில் 6,460 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,182 வழக்குகளில், ரூ.7.03 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com