தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி ஊசுடு தொகுதி திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது கூட்டத்தில் மாநிலஅளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றஅணிக்கு பரிசு வழங்கிய சட்டப்பேரவை எதிா்கட்சி தலைவரும் 

புதுவை கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும்

புதுவையின் கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.

புதுச்சேரி: புதுவையின் கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அருகேயுள்ள ஊசுடு தொகுதி திமுக சாா்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளின் வீரா்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஏழை, எளியோா்க்கு நல உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் பொறையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக நிா்வாகி கெளதம் பாஸ்கா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக தொகுதிச் செயலா் இளஞ்செழிய பாண்டியன் தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் லோகையன், மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணைத் தலைவா் மதிவாணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பேசியது: திமுக ஆட்சியின் போதுதான் ஊசுடு தொகுதி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போதைய பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதிதிராவிடா்களுக்கான சிறப்புக்கூறு நிதியை தவறாக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுச்சேரியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. புதுவையில் திறக்கப்பட்ட நடன மதுக்கூடங்களால் கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. மதுக்கூடங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, புதுவையின் பழைய கலாசாரத்தை மீட்டெடுக்கவேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com