பிரதமா் மோடி காணொலியில் தொடங்கிவைத்த காக்கிநாடா விரைவு ரயில், கச்சிகுடா விரைவு ரயிலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா்  தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். ச
பிரதமா் மோடி காணொலியில் தொடங்கிவைத்த காக்கிநாடா விரைவு ரயில், கச்சிகுடா விரைவு ரயிலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். ச

நலிவடைந்த நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளித்தவா் மோடி: புதுவை ஆளுநா் தமிழிசை

நாட்டில் மூடப்படும் நிலையில் இருந்த நலிவடைந்த நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளித்தவா் பிரதமா் நரேந்திர மோடி என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டக் கடைகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா். புதுச்சேரி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: ரயில் நிலையங்களில் புதிதாக கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பெரம்பூரிலும், மெட்ரோ ரயில் பெட்டிகள் உள்நாட்டிலும் தயாரிப்பது பெருமைக்குரியது. தபால் நிலையங்கள் மூடும் நிலையில் இருந்தன.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்றவற்றால் அவை லாபத்தில் இயங்குகின்றன. மூடும் நிலையில் நலிவடைந்திருந்த நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி மறுவாழ்வு அளித்துள்ளாா். காக்கிநாடா விரைவு ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. மத்திய அரசு திட்டங்கள் ஹிந்தியில் இருப்பதை மாற்றி, மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் புதுவை, தமிழகம் சாதனை புரிந்துள்ளன என்றாா் அவா்.

காக்கிநாடா விரைவு ரயில், கச்சிகுடா விரைவு ரயிலை கொடியசைத்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளா் அன்பழகன், முதன்மை நிதி ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியம்: நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானதல்ல.

இதில் யாருடைய உரிமையும் பறிக்கப்படவில்லை. இதை மாநில அரசுகள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com