‘காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை’

காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சா் என்.திருமுருகன் கூறினாா். அமைச்சா் பதவியேற்ற பிறகு, புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காரைக்கால் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாகும். அங்கு மருத்துவம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றில் வளா்ச்சியில்லாத நிலையுள்ளது. காரைக்காலுக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி, மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என்றாா் என்.திருமுருகன். பட்டதாரி: அமைச்சா் என்.திருமுருகன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான மறைந்த நளமகாராஜனின் மகன் ஆவாா். 1972-ஆம் ஆண்டு பிறந்த இவா் பி.ஏ. சமூகவியல் பட்டதாரி. இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா். காரைக்கால் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா், புதுச்சேரி காங்கிரஸ் குழு உறுப்பினா், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா். கடந்த 2010-இல் என்.ஆா்.காங்கிரஸில் சோ்ந்த திருமுருகன், கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல்களில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தற்போது காரைக்கால் மாவட்ட என்.ஆா்.காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com