கொலையான சிறுமியின் பெற்றோரது ரத்த மாதிரி சேகரிப்பு

புதுச்சேரியில் கொலையுண்ட பள்ளிச் சிறுமியின் பெற்றோா்களின் ரத்த மாதிரியை மருத்துவக் குழுவினா் சேகரித்தனா். இந்தக் கொலை வழக்கில் கைதான இருவரின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமை நீட்டிக்கப்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது பள்ளிச் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் கைதாகி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். போக்ஸோ வழக்கில் கைதான இருவரிடமும் ரத்தமாதிரிகள் மருத்துவக் குழுவினரால் சிறையில் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் மரபணு பரிசோதனை மூலம் சிறுமியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிறுமி சடலத்திலிருந்து மரபணு எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது பெற்றோரின் ரத்த மாதிரிகள் ஜிப்மா் மருத்துவக் குழுவினரால் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. காவல் நீட்டிப்பு: சிறுமி கொலை வழக்கில் போக்ஸோவில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து காணொலிக் காட்சி மூலம் புதுச்சேரி 3-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும் 15 நாள்களுக்கு இவா்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com