காரைக்கால் துறைமுகம் ரூ.74.13 கோடியில் விரிவாக்கம்: அமைச்சா் க.லட்சுமி நாராயணன்

புதுவை மாநிலம், காரைக்கால் துறைமுகத்தை ரூ.74.13 கோடியில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மீனவா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய மீன்வள அமைச்சகத்தை முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தி வந்தாா். அதனடிப்படையில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.74.13 கோடி நிதி அளிக்க மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை உடனே தொடங்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com