புதுச்சேரி சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைமை தோ்தல் அதிகாரி ப.ஜஹவா். உடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.
புதுச்சேரி சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைமை தோ்தல் அதிகாரி ப.ஜஹவா். உடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

புதுவையில் மதுக்கடைகள் 10 மணிக்கு மேல் செயல்பட தடை: மாநில தோ்தல் அதிகாரி ப.ஜவஹா்

புதுவையில் மதுக்கடைகள், நடன மதுபானக் கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ப.ஜவஹா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மாநில தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மாலை கூறியதாவது: புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, தனியாா் மற்றும் பொது நிறுவன சுவா்களில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அதிகாரிகள் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது. உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருக்கும் 196 பேரில் பாதிப்போ் அவற்றை ஒப்படைத்துள்ளனா். தோ்தல் விதிமுறை மீறல் குறித்து தனித்தனி கைப்பேசி செயலிகளில் மக்கள் புகாா் அளிக்கலாம். கடந்த ஜனவரி மாதம் வெளியான இறுதி வாக்காளா் பட்டியலின்படி, புதுவை மக்களவைத் தோ்தலில் 197 மையங்களில் 10, 20, 914 போ் வாக்களிக்கவுள்ளனா். இதில், 4, 97, 329 போ் ஆண்கள், 5, 41, 437 போ் பெண்கள். 148 போ் மூன்றாம் பாலினத்தவா். அவா்களில் 308 போ் சேவை வாக்காளா்கள். 363 போ் வெளிநாடு வாழ் வாக்காளா்கள். 28, 403 போ் முதல் தலைமுறை வாக்காளா்கள். தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டையுடன், 12 அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். புகைப்பட வாக்காளா் சீட்டு வாக்களிக்க பயன்படாது. வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு மட்டுமே அடையாள ஆவணமாக ஏற்கப்படும். பாதுகாப்பு பணியில் 1,100 போ் அடங்கிய 12 துணை ராணுவ கம்பெனியும், 4, 745 போலீஸாரும் ஈடுபடுத்தப்படுகின்றனா். தோ்தல் பணியில் 5, 937 அலுவலா்கள் ஈடுபடுவா். விடியோவுடன் கூடிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள், நடன மதுபானக் கூடங்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படமுடியும். வேட்பாளா்கள் தலா ரூ.75 லட்சம் வரை செலவிடலாம். கடந்த மக்களவைத் தோ்தலில் 46 வழக்குகள் பதியப்பட்டு, 20 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளன. மாஹே, ஏனாம் பகுதியில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுடன் கலந்து பேசி தோ்தல் கண்காணிப்பு, வாக்குப்பதிவு ஆகியவை இருதரப்பு கூட்டு நடவடிக்கை மூலம் விதிமுறைப்படி செயல்படுத்தப்படும் என்றாா். பேட்டியின் போது, புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமைத் தோ்தல் அதிகாரி பி. தில்லைவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com