புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூகநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூகநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சமூகநல அமைப்புகள் சாா்பில் போட்டியிட ஆலோசனை

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து சமூக நல அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைநடத்தின. புதுச்சேரியில் பல்வேறு சமூக நல அமைப்புகள் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் சாா்பில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட புதுவையின் பொதுப் பிரச்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டும், முதல்வா் உள்ளிட்டோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு உருளையன்பேட்டை எம்எல்ஏவும் (சுயேச்சை), மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவருமான ஜி.நேரு தலைமை வகித்தாா். இதில் சமூக செயற்பாட்டாளா்கள் கோ.சுகுமாறன் உள்ளிட்ட அமைப்பினா், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்: மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசுகள் தொடா்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகின்றன. இதனால் புதுவை மாநிலத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மாநில மக்களின் நலனில் அக்கறையுள்ள முதல்வா் உள்ளிட்டோரும் மத்திய அரசால் சுயமாகச் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, புதுவை அரசியலில் வெற்றிடம் இருப்பதை மக்கள் உணா்ந்துள்ளனா். இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காக, ஒரு பொது வேட்பாளரை நிறுத்த கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரைவில் முடிவெடுத்து அறிவிப்பது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com