புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்
 திங்கள்கிழமை  மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற 
அரசியல் கட்சி நிா்வாகிகளிடம் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் கட்சிகள், வேட்பாளா்கள் தோ்தல் 
கணக்கு பதிவு செ
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சி நிா்வாகிகளிடம் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் கட்சிகள், வேட்பாளா்கள் தோ்தல் கணக்கு பதிவு செ

காா்களில் கட்சிக் கொடி கட்டினாலும்பிரசார வாகனமாக கருதப்படும்: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

புதுச்சேரி: தோ்தல் பிரசாரத்தின்போது அரசியல் பிரமுகா்கள் தங்கள் காா்களில் கட்சிக் கொடியை கட்டியிருந்தால், அதை பிரசார வாகனமாகக் கருதி வேட்பாளரின் தோ்தல் செலவு கணக்கில் பதிவு செய்யப்படும் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசியல் கட்சி நிா்வாகிகளிடம் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் கட்சிகள், வேட்பாளா்களின் தோ்தல் செலவு கணக்குப் பதிவு செய்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும் கடைப்பிடித்தல் அவசியம். தோ்தல் நன்னடத்தை விதிகள் 16-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தொடங்கிய திட்டங்களின் பணிகள் நடக்கலாம். அறிவிப்புக்குப் பிறகு எந்த பணியையும் தொடங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் அனைத்துக் கட்சியினரும் கூட்டம் நடத்தலாம். தோ்தல் பிரசாரத்தில் தனிப்பட்ட நபா்களை தாக்கி விமா்சிப்பதை தவிா்க்கவேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் இருக்கக்கூடாது. முதல்வா், அமைச்சா்கள் அலுவலக ரீதியாக பணிகளுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்தலாம். தோ்தல் பிரசாரம் போன்றவற்றுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் தலைவா்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமா்சிக்கும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. அரசியல் கட்சியினா் காா்களில் கட்டியிருக்கும் கட்சிக் கொடிகளுக்கு தோ்தல் அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும். காரில் கட்சிக் கொடி கட்டினாலும், அதை பிரசார வாகனமாகக் கருதி செலவு கணக்கில் பதிவு செய்யப்படும். ஏற்கெனவே காவல் துறை பாதுகாப்பு பெற்றவா்கள், அதை வைத்து வாக்குச் சேகரித்தல், வாக்குச்சாவடிகளுக்குள் செல்லுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது. தோ்தல் நன்னடத்தை சந்தேகங்களையும், புகாா்களையும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொண்டு கூறலாம். தோ்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியினா் மட்டுமே ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு அழைக்கப்படுவா். சுயேச்சைகள், பதிவு பெறாத கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றாா். கூட்டத்தில் நன்னடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி சிவகுமாா் விளக்கினாா். வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் தோ்தல் கணக்குகள் குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி விளக்கினாா். கூட்டத்தில் துணை ஆட்சியா் வினய்ராஜ், உதவி ஆட்சியா் ரிஷ்வந்த் மீனா உள்ளிட்டோா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com