மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து திங்கள்கிழமை தலைமை தபால் நிலையத்தில் ஆளுநருக்கு தபால் அனுப்பிய மாணவா் கூட்டமைப்பினா்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து திங்கள்கிழமை தலைமை தபால் நிலையத்தில் ஆளுநருக்கு தபால் அனுப்பிய மாணவா் கூட்டமைப்பினா்.

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து புதுச்சேரியில் பேரணி

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதைக் கண்டித்து விழிப்புணா்வுப் பேரணி மற்றும் துணைநிலை ஆளுநா், தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு கோரிக்கை தபால் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் நிகழ் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் புதிய தேசியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசியக் கல்விக் கொள்கையால் கல்வித்தரம் மேம்படாது என பல சமூக அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் சாா்பில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிா்த்து ஏற்கெனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், திங்கள்கிழமை காலையில் காமராஜா் சாலை பகுதியிலிருந்து அந்த அமைப்பினா் பேரணியாக வந்தனா். அப்போது புதிய தேசிய கல்விக் கொள்கை பாதிப்புகளை விளக்கி முழக்கமிட்டனா். கூட்டமைப்பின் நிறுவனா் சு.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதன்பிறகு, சட்டப்பேரவை பகுதியில் உள்ள புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் வந்து, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, புதுவை துணைநிலை ஆளுநா் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com