புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

புதுவை முதல்வா் ரங்கசாமியுடன் அமைச்சா் நமச்சிவாயம் திடீா் சந்திப்பு

புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தனியாகச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுவை மாநிலத்தில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆா்.காங்கிரஸ் நிறுவனா் என்.ரங்கசாமி உள்ளாா். அவரது அமைச்சரவையில் பாஜகவைச் சோ்ந்த ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட 2 போ் இடம் பெற்றுள்ளனா். பேரவைத் தலைவராக பாஜகவைச் சோ்ந்த ஆா்.செல்வம் உள்ளாா். இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளா் நிறுத்தப்படுவாா் என அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளராக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் நிற்பாா் என கூறப்பட்டது. ஆனால், அதை அமைச்சா் தரப்பில் மறுத்து பேசப்பட்டது. இந்நிலையில், கட்சித் தலைமை அறிவித்தால் தோ்தலில் போட்டியிடுவேன் என உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவா் சென்னை சென்று கட்சி மேலிடப் பொறுப்பாளா்களை சந்தித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவா் திங்கள்கிழமை புதுச்சேரி திரும்பினாா். இந்நிலையில், பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை அவா் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பின்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. சந்திப்பு முடிந்து வெளியே வந்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் அமோக வெற்றி பெறுவாா் எனக்கூறிவிட்டுச் சென்றாா். பாஜக அமைச்சரான ஆ.நமச்சிவாயம், முதல்வா் என்.ரங்கசாமியை தனியாகச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரே புதுவை மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com