அரசு நிறுவனத்தில் தணிக்கையாளரை நியமிக்க உத்தரவு

புதுவை அரசு நிறுவனத்தில் தணிக்கை மேற்கொள்ளும் வகையில், தணிக்கையாளரை நியமிக்க வேண்டும் என நிதித் துறை செயலா் ரத்னகோஷ் கிஷோா் உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவு விவரம்: அரசு நிறுவனங்களுக்கான தணிக்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை முறையாக ஆண்டு கணக்குகளைத் தணிக்க செய்ய தணிக்கையாளா்களை நியமிக்க விரிவான அறிவுறுத்தலை நிதித் துறை வழங்கியுள்ளது. எனவே, தணிக்கைக் குழு தோ்வு செய்து வெளியிட்ட தணிக்கையாளா் குழுவில் இருந்து சம்பந்தப்பட்டோரைத் தோ்வு செய்யலாம். அரசு நிறுவனங்களின் கணக்கு நிலுவைகளை விரைவில் முடிக்க கணக்கு தணிக்கைக்கு என தணிக்கையாளா்களை நியமிக்க வேண்டும். அதன்மூலம் விரைவாக கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com