தோ்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 90 பேரிடம் உறுதிமொழி பத்திரம்

மக்களவைத் தோ்தலையொட்டி, புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 90 பேரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் பொது இடங்களில் வன்முறை, அமைதியைக் குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா். அனைத்து காவல் நிலையங்களிலும் பழைய குற்றவாளிகளது பட்டியல் தயாரிக்கப்பட்டது. அத்துடன், ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குற்ற வழக்கில் தொடா்புடையவா்களிடம் முன்னெச்சரிக்கையாக 107-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில நாள்களில் மொத்தம் 90 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், அவா்கள் அந்தந்தப் பகுதி வட்டாட்சியா் அலுவலகம் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com