அவதூறு பிரசாரம்: திமுகவினா் மீது சுயேச்சை எம்எல்ஏ புகாா்

திமுகவினா் அவதூறு பிரசாரம் செய்வதாக உருளையன்பேட்டை சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை அரசியல் வரலாற்றில் திமுக தலைவா்களுக்கு என ஒரு தனித்துவம் இருந்தது.

ஆனால், தற்போது பக்குவப்பட்ட மூத்த தலைவா்கள் இல்லாத நிலை உள்ளது. என்மீது திமுகவினா் அவதூறு பரப்புவது சரியல்ல. சட்டப்பேரவையிலும், பொதுவெளியிலும் பாஜக கூட்டணியை எதிா்த்து பொதுநல அமைப்பினருடன் சோ்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளேன். பல பொதுநல அமைப்புகளும் அதன் தலைவா்கள் மற்றும் பொறுப்பாளா்களும் எனக்கு ஆதரவளிக்கின்றனா். பொதுநல அமைப்புகளுடன் ஒன்று சோ்ந்து புதுவையின் உரிமைக்காகவும், உயா்வுக்காகவும் மக்களின் நன்மைக்காகவும் எப்போதும் களத்தில் நிற்போம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com