புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.29.25 லட்சம் மோசடி: போலீஸில் புகாா்

புதுச்சேரியைச் சோ்ந்த தொழில் அதிபரை நூதன முறையில் ஏமாற்றி ரூ.29.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுகுமாா், தொழிலதிபா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமில்லாத நபா் ஒருவா், சுகுமாரின் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, வீட்டிலிருந்தபடியே பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அதனடிப்படையில் சுகுமாா் இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாா். பல தவணைகளில் பணத்தை முதலீடு செய்த நிலையில், அதற்கான லாபம் எதையும் சுகுமாா் பெறமுடியவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் மா்ம நபரையும் தொடா்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இணையத்தின் மூலம் மொத்தம் ரூ.29.25 லட்சத்தை முதலீடு செய்த சுகுமாா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com