மாா்ச் 25-இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு மூடல்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் ஜிப்மா் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு வரும் 25-ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை தினமாக வரும் 25-ஆம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் ஜிப்மா் வெளிப்புற நோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை இயங்காது. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு திங்கள்கிழமை வருவதை தவிா்க்கலாம். அதேநேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com