புதுச்சேரியில் ஞாற்றுக்கிழமை நடைபெற்ற தலித் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் நீலகங்காதரன்.
புதுச்சேரியில் ஞாற்றுக்கிழமை நடைபெற்ற தலித் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் நீலகங்காதரன்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு தலித் கூட்டமைப்பினா் ஆதரவு

புதுச்சேரியில் தலித் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி பெரியாா் படிப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலித் அமைப்புகளின் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நீலகங்காதரன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் பொதுச் செயலா் ராமசாமி, ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி, பொருளாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் பழங்குடியின மக்கள் அமைப்பின் தலைவா் ஏகாம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்துக்கு தலித் அமைப்புகள் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com