ஜனநாயகத்தைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் கூறினாா். புதுச்சேரி அருகேயுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை காங்கிரஸ் எதிா்க்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்புகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவா் போல பிரதமா் மோடி நடந்து கொள்கிறாா். வருகிற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து ஆட்சிக் கட்டியில் அமர வைப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். பாஜகவுக்கு மறைமுகமாக உதவும் கட்சியாக அதிமுக செயல்படுகிறது. அந்தக் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகவே அா்த்தமாகும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com